சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி கொலு
ADDED :2938 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி உற்சவத்தையொட்டி நுாற்றுக்கால் மண்டபத்தில் 21 படிகளில் கொலு வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் நவராத்திரி உற்சவம் துவங்கியது. இதனையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் நுாறு கால் மண்டபத்தில் 21 படிகள் அமைக்கப்பட்டு சிறிய பொம்மைகள் முதல் பெரிய பொம்மைகள் என 3,000 பொம்மைகள் வைத்து கொலு அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி கொலுவின் போது தினமும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என 9 அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.