உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நவராத்திரி கொலு

காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நவராத்திரி கொலு

காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் நேற்று முன்தினம் கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் 21ம் தேதி முதல் 30ம்தேதி வரை நடைபெறுகிறது.முதல் நாள் தொடங்கிய நவராத்திரி கொலு தர்பார்ரை திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தார். இன்நிகழ்ச்சியில் எம்எல்.ஏ.,அசனா,கூடுதல் மாவட்ட ஆட்சியர் மங்கலெட் தினேஷ்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை அமைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன்,மரகதவேல்,ரவிசந்திரன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !