நவராத்திரி கொண்டாட்டம்: பெருமாள் கோவிலில் கொலு
ADDED :2994 days ago
புன்செய்புளியம்பட்டி: கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு வைத்து, சிறப்பு பூஜை நடந்தது. புன்செய்புளியம்பட்டி, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் விநாயகர், கிருஷ்ணர், சரஸ்வதி, துர்காதேவி முதலான சுவாமி சிலைகள் மற்றும் பல வகையான அழகு பொம்மைகள் கொலுவில் வைத்து, பூஜை செய்யப்பட்டது. இதில், புன்செய்புளியம்பட்டி, நொச்சிக்குட்டை,கோவில்புதூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.