திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED :2935 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சன்னிதியில் அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கபட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர், மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது. ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.