உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி, தசரா விழா : பூக்கள் விலை கடும் உயர்வு

நவராத்திரி, தசரா விழா : பூக்கள் விலை கடும் உயர்வு

திருநெல்வேலி: புரட்டாசி மாதம் முகூர்த்தம் இல்லாத நிலையிலும், நவராத்திரி பண்டிகை காரணமாக, பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில், மல்லிப்பூ விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. நெல்லை டவுன், பாளை பூ மார்க்கெட்களில், 400 - 500 ரூபாய்க்கு விற்ற, 1 கிலோ மல்லிகை பூ, மாலையில், 1,000 ரூபாயாக உயர்ந்தது. மல்லிகை பூ விலை உயர்வால், பிச்சி பூ விலையும், அதிரடியாக உயர்ந்துள்ளது. தற்போது, பிச்சி முதல் ரகம் 300 - 800 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது குறித்து மொத்த பூ வியாபாரிகள் கூறியதாவது: தற்போது மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால், வரத்தும் குறைந்துள்ளது. நவராத்திரி உற்சவம் மற்றும் தசரா பண்டிகை காரணமாக, வீடுகள், கோவில்களில், மல்லிகை, பிச்சி பூ தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முகூர்த்தம் இல்லாத நிலையிலும், விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !