உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை சரஸ்வதிக்கு மட்டுமே!

பூஜை சரஸ்வதிக்கு மட்டுமே!

பூஜை என்ற அடைமொழி இருப்பது சரஸ்வதிக்கு மட்டுமே. தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என சொல்வதில்லை. பூஜை என்ற சொல்  பூஜா என்பதில் இருந்து வந்ததாகும். பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. அதாவது மனிதனை முழுமை பெறச் செய்வது  பூஜை. தான் என்னும் ஆணவம், அடுத்தவன் வளர்ச்சி கண்டு உருவாகும் பொறாமை குணம், வாழ்வு நிரந்தரமானது என்ற மாயை ஆகிய  மூன்றும்  மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றை சைவ சித்தாந்தம் ஆணவம், கன்மம், மாயா மலம் என குறிப்பிடுகிறது.  இம்மூன்று அழுக்குகளை போக்கி ஞானத்தை உண்டாக்குவது பூஜை. சரஸ்வதியை வழிபட்டால் ஞானம் பெற்று மனிதன் முழுமை  பெறுகிறான் என்பதால் பூஜை என குறிப்பிடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !