அரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் சுவாமி உலா
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஈரோடு, கோட்டையில் எழுந்தருளியுள்ள கஸ்தூரி அரங்கநாதர் கோவில், பிரம்மோற்சவ விழா, கடந்த, 24ல் தொடங்கி நடந்து வருகிறது. அக்., 1ல் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அனந்த சயனகோலத்தில் அருள் பாலிக்கும் மூலவருக்கு, பட்டு பீதாரம்பரத்தில் அலங்காரம், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக காட்சியளிக்கும் உற்சவ மூர்த்தி, கஸ்தூரி அரங்க நாதருக்கு திருமஞ்சனம், அபி?ஷகம், அலங்காரம் மஹா தீபாராதனை நடக்கிறது. காலையில், யாசாலை பூஜை, மாலையில் திருவீதியுலா புறப்பாடு நடக்கிறது. தினமும் பல்வேறு வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். நேற்று, சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாளாக எழுந்தருளி, சுவாமி திருவீதியுலா வந்தார். வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என, கோஷம் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.