உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி:ஏராளமானோர் அஞ்சலி

காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி:ஏராளமானோர் அஞ்சலி

நாகர்கோவில்: காந்தி ஜெயந்தி நாளான நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டப அஸ்தி பீடத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது.காந்தியடிகள் இறந்த பின்னர் அவரது அஸ்தி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கரைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து அந்த இடத்தில்காந்தியடிகளின் நினைவாகஅவரது வயதை குறிக்கும் வகையில்79 அடி உயரத்தில் மண்டபம் கட்டப்பட்டது. அவரது பிறந்த நாளான அக்., இரண்டாம் தேதி அவரது அஸ்திபீடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டது.நேற்று இந்த அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11:55 மணிக்கு கட்டடத்தின் உள்ளே விழுந்த சூரிய ஒளி சிறிது சிறிதாக நகர்ந்து 12:00 மணிக்கு அஸ்திபீடத்தில் விழுந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ரகுபதிராகவராஜாராம் என்ற பாடலை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங்சவான், விஜயகுமார் எம்.பி.,உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெண்கள் ராட்டையில் நுால் நுாற்றனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !