உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரும் 7ல் புரட்டாசி 3ம் சனி நைனாமலையில் கோலாகலம்

வரும் 7ல் புரட்டாசி 3ம் சனி நைனாமலையில் கோலாகலம்

நாமக்கல்: ’புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான, வரும், 7ல் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்வர்’ என, எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே, நைனாமலையில், 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. வரலற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். கடந்த, 17 ல் புரட்டாசி துவங்கியது. தொடர்ந்து, 23, 30 என, இரண்டு சனிவார விழா முடிந்துள்ளது. வரும், 7ல் மூன்றாவது சனிவார விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !