வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவம் நிறைவு
ADDED :3039 days ago
சூரமங்கலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், 14ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 22ல் துவங்கி நேற்று வரை நடந்தது. விழாவை முன்னிட்டு, தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலையில் பெருமாள் திருவீதி உலா நிகழ்வு நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு ஹோமங்கள் ஓதப்பட்டன. மதியம், 12:00 மணிக்கு திருப்பாவாடை உத்ஸவம், மாலை, 6:00 மணிக்கு புஷ்பயாகம் இரவு, 7:00 மணிக்கு சத்தாபரணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.