அம்பிகையின் நிறம்!
ADDED :2929 days ago
மூகரின் பஞ்ச சதி’ என்னும் ஸ்தோத்திரத்தில் அம்பிகையின் நிறம் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. குங்குமப் பூங்கொத்து போல சிவந்தவள், கோமளக் கொடியாக திகழ்பவள், செக்கச் சிவந்தவள் என கூறப்பட்டுள்ளது. சில பாடல்களில் கரியவள் என்பதை, கருநீலக் காயாம்பூ போல் ஒளிர்பவள்’ என சொல்லப்பட்டுள்ளது.ஆதிசங்கரர் சவுந்தர்ய லஹரியில், ஜயதிகருணாகாசித் அருணா’ என கீழ்வானத்தின் சிவந்த நிறம் கொண்டவள் எனக் குறிப்பிடுகிறாள். பரம்பொருளாக விளங்கும் கடவுளுக்கு நிறம் என்பது கிடையாது. ஆனால் உயிர்களைக் காக்கும் கருணையால் அது, நிறங்களை தாங்கி அம்பிகையாக வெளிப்படுகிறது. கீழ்வானில் சிவப்பு (அருணா) நிறத்துடன் தோன்றி உயிர்களைக் காக்கிறாள் என சங்கரர் பாடியுள்ளார்.