உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம்

சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் இன்று (4ம் தேதி) நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு மகா அபிஷேகம் நடக்கிறது. மகா அபிஷேகம் சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நட்சத்திர நாளிலும், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதியில் நடக்கிறது. நடராஜருக்கு இந்த ஆண்டின் நான்காவது மகா அபிஷேகம் இன்று (4ம் தேதி) மாலை நடக்கிறது. அதனையொட்டி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் சித்சபையில் இருந்து கனகசபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் கோவில் பொது தீட்சிதர்களின் மந்திர அட்சதை நடைபெற்று சிறப்பு யாகசாலை ேஹாம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து அம்மன், சுவாமிக்கு மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகம் நள்ளிரவு வரை நீடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !