மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தெப்பத்திருவிழா
ADDED :3033 days ago
மதுரை: தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினசரி மாலையில் பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.