உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஆயுஷ் கிளினிக்

சபரிமலையில் ஆயுஷ் கிளினிக்

சபரிமலை: சபரிமலையில், வரும் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில், மத்திய அரசின், ஆயுஷ் ஆயுர்வேத கிளினிக் செயல்பட துவங்கும், என, மத்திய அமைச்சர், ஸ்ரீபட் நாயக் கூறினார்.சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில், கேரள அரசின் மருத்துவமனை செயல்படுகிறது; சிறிய அளவிலான, ஆயுர்வேத சிகிச்சை மையமும் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஆயுஷ் ஆயுர்வேத மருத்துவமனையை, சபரிமலையில் துவங்க வேண்டும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பிரயார் கோபாலகிருஷ்ணன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் நேற்று, சபரிமலைக்கு வந்திருந்த, மத்திய ஆயுஷ் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்ரீபட் நாயக் கூறியதாவது: அடுத்த மாதம் துவங்க உள்ள, மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில், சன்னிதானத்தில், ஆயுஷ் கிளினிக் செயல்பட துவங்கும். வரும் ஆண்டுகளில், இந்த சேவை மேலும் விரிவுபடுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள், விரைவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !