உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளிக்காக வெளிநாடு செல்லும் நாட்டரசன்கோட்டை செட்டிநாடு முறுக்கு

தீபாவளிக்காக வெளிநாடு செல்லும் நாட்டரசன்கோட்டை செட்டிநாடு முறுக்கு

சிவகங்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டரசன்கோட்டை செட்டிநாடு முறுக்குக்கு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள்  குவிந்து வருகின்றன. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் செட்டிநாட்டு பலகாரங்கள்  தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் முறுக்கு மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும். ஒருமுறை பாக்கெட் செய்தால் மூன்று மாதங்கள் வரை  கெடாது. இதற்கு சேர்மான பொருட்களின் தரமும், கை பக்குவமும் தான் காரணம் என்கின்றனர். மேலும் இங்கு மண் அடுப்பில் தான்  முறுக்கு சுடுகின்றனர். இதனால் சுவையும், மணமும் மாறாது என்கின்றனர்.  நாட்டரசன்கோட்டை முறுக்குக்கு தனி கிராக்கி. இந்தியா  மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட இங்கிருந்து முறுக்குகளை ஆர்டர் செய்து வாங்கி செல்கின்றனர்.  அக்., 18 ல் தீபாவளி  என்பதால் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர்.      காசிவிஸ்வநாதன், கண்ணத்தாள் கூறியதாவது:  முறுக்கு சுடுவதற்கு சமையல்  எண்ணெய்யை ஒருமுறை தான் பயன்படுத்துவோம். இதனால் எளிதில் கெடாது. ஒரு படி அரிசி, கால்படி உளுந்தில் 50 முறுக்குகள்  வரை தயாரிக்கிறோம். ஒருமுறுக்கு 5 ரூபாய்க்கு கொடுக்கிறோம். கட்டுப்படியாகாத விலை என்பதால் பெரிய அளவில் லாபம்  கிடைப்பதில்லை. கூலி தான் கிடைக்கும். இருந்தாலும் பாரம்பரியமாக இத்தொழிலை செய்து வருகிறோம்.  தீபாவளிக்கு இரு வாரங்களே  இருப்பதால் ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. சிங்கப்பூர், துபாய், குவைத் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறோம். பண்டிகைக்கு  மட்டுமின்றி விேஷச காலங்களிலும் ஆர்டர்கள் வரும், என்றனர். தொடர்புக்கு 97883 72870.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !