சீரடி சாய்பாபா கோவிலில் யாகசாலை பூஜை நிகழ்ச்சி
ADDED :2926 days ago
திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள சீரடி சாய்பாபா கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது. திண்டிவனம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில், சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் சார்பில் நேற்று காலை யாகசாலை பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. பிற்பகல் 1.00 மணிக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மாலை 3:00 மணிக்கு, சீரடி சாய் பாபாவின் பட ஊர்வலம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.