அழகியமீனாள் கோயிலில் முளைப்பாரி திருவிழா
ADDED :2924 days ago
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கே.புதுக்குளத்தில் உள்ள அழகியமீனாள் கோயிலில் கிராம மக்கள் மழை வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் முளைப்பாரி திருவிழாவை நடத்தினர்.இதை முன்னிட்டு முளைக்கொட்டு தின்னையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டன.தினந்தோறும் இரவு காப்புக் கட்டி விரதமிருந்து, பெண்கள் வழிபட்டு வந்தனர். முளைப்பாரிகள் நன்றாக வளர்ந்ததையடுத்து, நேற்று முன்தினம் மாலை கிராம மக்கள் முளைப்பாரிகளை கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே கொண்டு சென்று கண்மாயில் கரைத்தனர். பின்னர் அழகியமீனாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிேஷகங்களும்நடந்தது.