உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஜனைக்கோவிலில் கருட சேவை உற்சவம் கோலாகலம்

பஜனைக்கோவிலில் கருட சேவை உற்சவம் கோலாகலம்

உத்திரமேரூர் : பஜனைக்கோவிலில், நேற்று இரவு, கருடசேவை விழா கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர், கருணீகர் தெருவில் உள்ள பஜனை கோவிலில், பெருமாள் சுவாமிக்கு, 20ம் ஆண்டு புரட்டாசி மாத கருடசேவை உற்சவம், நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கருணீகர் தெரு, திருமலையாபிள்ளைத்தெரு, எஸ்.பி.கோவில் தெரு, பஜார் வீதி, சன்னதி தெரு, மாட வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, கருட வாகனத்தில் வீதியுலா வந்த பெருமாளை, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !