உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமதூத ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருத்தளிகை கண்டருளல் நிகழ்ச்சி

ராமதூத ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருத்தளிகை கண்டருளல் நிகழ்ச்சி

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் திருத்தளிகை கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை ஏரியில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஆணைக்கல்லில் அமைந்துள்ள ராமதுாத ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருத்தளிகை கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ராதாருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !