கூமாப்பட்டி அம்மச்சியார் அம்மன் கோயிலில் அன்னதான வழிபாடு
ADDED :2921 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி அம்மச்சியார் அம்மன் கோயிலில் மழைவேண்டி அன்னதான வழிபாடு நடந்தது. நிலக்கிழார் ராமநாதன் பூஜையை துவக்கி வைத்தார். இதனையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் பூஜைகள் நடந்தது. உச்சிகால பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு அன்னப்படையல் இட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் படையல் இடப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தசபா நிர்வாகிகள் சுந்தரம், பால்ராஜ், முத்துமாலை உட்பட பலர் செய்தனர்.