உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச.,10ல் சந்திரகிரகணம் சமயபுரம் கோவிலில் நடை அடைப்பு!

டிச.,10ல் சந்திரகிரகணம் சமயபுரம் கோவிலில் நடை அடைப்பு!

திருச்சி: சந்திரகிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில், வரும் 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சமயபுரம் மாரியம்மன் கோவிலில், வரும் 10ம் தேதியன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, ஆறு மணிக்கு உஷக்கால பூஜையும், காலை எட்டு மணிக்கு காலச்சந்தியும், 8.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடக்கிறது.சந்திரகிரகணம் துவங்கும், மாலை 6.15 மணி முதல் இரவு 9.18 மணி வரை, சமயபுரம் மாரியம்மன் கோவில், உபகோவில்களான மாகாளிக்குடி உஜ்ஜயினி, முக்தீஸ்வரர் கோவில், சமயபுரம் போஜூஸ்வரர், செல்லாண்டியம்மன் கோவில்களில், மதியம் 2 மணிக்கு சாயரட்சையும், மாலை 4 மணிக்கு 2ம் கால பூஜை மற்றும் அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது.மாலை 4.30 மணிக்கு, அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டு, மறுநாள் (11ம் தேதி) காலை வழக்கம்போல மாலை 5 மணிக்கு, முன்னேற்பாடாக சபணங்கா பூஜைகள் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் மீண்டும் நடைகள் திறக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடலை தீபம்: மண்ணச்சநல்லூர்: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை (8ம் தேதி) திருக்கார்த்திகையொட்டி "சுடலை கொளுத்தப்படுகிறது.திருக்கார்த்திகையொட்டி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை (8ம் தேதி) மாலை 6 மணிக்கு, அபிஷேகத்துக்கு பிறகு சுடலை தீபம் கண்டருள அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடக்கிறது. மாலை 7 மணிக்கு அம்பாள் சுடலை தீபம் கண்டருள்கிறார். இரவு 7.30 மணிக்கு அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் திருக்கோவிலை சென்றடைகிறார்.விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !