உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை கார்த்திகை தீப திருவிழா

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை கார்த்திகை தீப திருவிழா

கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாயை ஒட்டி அம்பாளுக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நாளை (8ம் தேதி) நடக்கிறது.கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றுமச வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பகவதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா நாளை (8ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு அபிஷேகம், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அம்பாளுக்கு வைர கிரீடம் மற்றும் திருவாபரணம் சார்த்தப்பட்டு 11.30 மணிக்கு தீபாராதனை, 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 12.30 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்ப்டடு 6.30 மணிக்கு சாயரட்சா தீபாராதஜைன, இரவு 8.30 மணிக்கு அம்பாள் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வலம் வருகிறார். பின்னர் அம்பாள் தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலத்திற்கு அருகே சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்கினறனர்.

ஆராட்டு:சொக்கப்பனை கொளுத்தப்பட்ட பிறகு அம்பாள் கடலில் ஆராட்டிற்கு பின்னர் கிழக்குவாசல் நடை திறக்கப்பட்டு கோயில் வருகிறார். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !