உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச., 10ல் கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி யாகம்; ஏற்பாடு தீவிரம்!

டிச., 10ல் கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி யாகம்; ஏற்பாடு தீவிரம்!

கும்பகோணம்: திருநா கேஸ்வ ரம் பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் வருகிற 10ம் தேதி சிறப்பு பவுர்ணமி யாகத்திற்கு தீவிர ஏற்பாடுநடந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ் சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு சரபசூலினி அம்மன் அருள்பாலிக்கிறார். அம்மனின் தலையில் வைக்கும் எலுமிச்சை தானாக இறங்கி வரும் அதிசயம் இன்றும் நடந்து வருகிறது.சிறப்புமிக்க இவ்வால யத்தில் பிரதி அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் சரபசூலினி சன்னதி எதிரில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 10ம் தேதி சந்திரகிரகண பௌர்ணமி என்பதால் சிறப்பு மகா யாகம் அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. யாகத்தில் சென்னை மறைமலை நகர் பாபா சுவாமிகள், பெங்களூர் குமார் உள்ளிட்ட திரளான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அன்று மாலை 6.30 மணிக்கு ஆலய பரம்பரை அறங்காவலர் நாகராஜகுருக்கள் தலைமையில் திரளான சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்கின்றனர். இரவு 9.30 மணி வரை நடைபெறும் யாகத்தில் பங்கு பெறுவதால் வழக்குகளில் வெற்றி, செய்வினை கோளாறுகள் அகலுதல் போன்ற பல்வேறு நற்பலன்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிறப்பு யாக ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர் நாகராஜகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !