காட்டு வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் அருள் மிகு காட்டு வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி கடந்த 3ம் தேதி மாலை தெய்வ பிராத்தனை, விஸ்வசேன ஆராதனை, சுத்தி புண்ணியா வஜனம், வாஸ்து ஹோமம் நடந்தது. 4ம் தேதி காலை 7 மணிக்கு நவகும்பாராதனை, நவக்கிரஹ ஆராதனை, மஹா கணபதி ஹோமம், மகா மங்களார்த்தி நடந்தது. மாலை 4 மணிக்கு உற்சவ விக்கரங்களுக்கு மஹா சாந்தி அபிஷேகம் மற்றும் மகா மங்களஹார்த்தி தீர்த பிரசாதம் விநியோகம் நடந்தது. இரவு 8 மணிக்கு சொர்க்க வாசல் கோபுர கலச ஸ்தாபனம், மஹா கணபதி பிரதிஷ்டை நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மஹா கணபதி பூஜை, கலச பூஜை, நவகும்பா மற்றும் நவக்கிரக ஆராதனை, மஹா சாந்தி ஹோமம், மஹா பூர்ணாகுதி நடந்தது. 10 மணிக்கு காட்டு வீர ஆஞ்சநேய சுவாமி, மகாலட்சுமி தாயார், வெங்கட்டரமண சுவாமி, யோக நரசிம்மர் சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு மஹா கும்பாபிஷேகம நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.