உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்; டிச., 2ல் கார்த்திகை தீபத்திருவிழா

அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்; டிச., 2ல் கார்த்திகை தீபத்திருவிழா

கார்த்திகை தீபத்தையொட்டி, காஞ்சிபுரத்தில், அகல் விளக்கு தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழா, டிச., 2ல் கொண்டாடப்பட உள்ளது. அன்று, கோவில், வீடு, கடை மற்றும் அலுவலகங்களில், அகல் விளக்கில் தீபமேற்றி, மக்கள் வழிபடுவர். இந்நிலையில், திருக்காலிமேடு உடையார் தெருவில், மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, மண்பாண்ட தொழிலாளி பி.முனுசாமி கூறியதாவது: தீபத்திற்கான அகல் விளக்குகளை தயாரித்து மொத்த வியாபாரிகளிடம், சிறிய அகல் விளக்கு, 40 பைசாவிற்கும், பெரிய விளக்கு, 60 பைசாவிற்கும் கொடுக்கிறோம். அவர்கள், 1.50 முதல், 2 ரூபாய் வரை விற்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலைகளில் மண் எடுக்க அரசு தடை விதித்து உள்ளதால், வெளி மாவட்டங் களில் விலை கொடுத்து களிமண் வாங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !