கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :3126 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிேஷக பூஜைகள் நடந்தது. சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியன்று, கால பைரவருக்கு மாலை, 5:00 மணியளவில், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்ற வைகளால் அபிேஷக பூஜை நடந்தது. பின், கால பைரவருக்கு, ரோஜா, வடை மாலைகள் சாத்தப்பட்டது. சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பூசனி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைளில் விளக்கேற்றி கால பைரவரை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.