உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

திருத்தணி : முருகன் மலைக்கோவிலில், காய்ச்சலை தடுப்பதற்கு, 1,000 பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை, எம்.பி., வழங்கினார். தமிழகத்தில், மொத்தம், 12,200 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஒன்றரை மாதத்திற்கு மேலாக தினமும், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில், மலைக்கோவிலில் உள்ள சித்த மருத்துவம் சார்பில், நேற்று, நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அரக்கோணம் எம்.பி., அரி, பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கி துவக்கி வைத்தார். நேற்று, ஒரே நாளில், 1,000 பக்தர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு அலுவலர் சுப்ரமணியம், கூட்டுறவு வேளாண் சங்கத் தலைவர் ஜெய்சேகர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !