தீபாவளிக் குளியலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
‘தீபாவளி அன்று விடியற்காலை வேளையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும்.’ என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனை ‘அபயங்கனம்’ என்பர். அதற்கு முன் கிழக்கு நோக்கி அமர்ந்து எண்ணெயை ஆண்கள் ஏழுதடவையும், பெண்கள் ஐந்து தடவையும் பூமியில் ‘பொட்டாக ’ வைத்து தலையில் தடவிக் கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
கங்காதேவியை நினைத்து ஆண்கள் சொல்ல வேண்டிய சுலோகம்:
“அஸ்வத்தாமா பலா வ்யாஸோ
ஹனுமான்ச விபீஷண
க்ருப பரசு ராமஸ்ச
ஸப்தை தே சிரஞ்ஜீவன ”
கங்காதேவியை நினைத்து பெண்கள் சொல்ல வேண்டிய சுலோகம்:
“அகல்யா த்ரௌபதீதாரா
சீதா மந்தோ தரீததா
பஞ்சகன்யா: ஸ்மரேந்நித்யம்
மஹாபாதக நாசனம் ’
நதியில் நீராடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:
கங்கேச யமுனேசைவ, கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னதிம் குரு’
வீட்டில் வாளியிலிருந்து நீரினை சொம்பினால் எடுத்துக் குளிக்கும் போது கூட இந்த சுலோகத்தைச் சொல்லிக் குளிப்பது நல்லது. அன்று எல்லா நீரிலும் கங்கை ஆவிர்பவிக்கிறாள், நம் வீட்டுக் குழாயில் வரும் நீரிலும் தான்! தீபாவளி அன்று குளிக்கும் நீரில் ஆல், அத்தி, புரசு மா, விலங்கை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊறவைத்து சிலர் நீரோடுவர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இந்த வழக்கம் இன்றும் கிராமத்தில் உள்ளது.
தீபாவளி அன்று பூஜை செய்வதற்கு முன், தீபங்கள் ஏற்றும் போது
‘ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரி
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ரு ஹேஸ்வரி
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரி
என்ற சுலோகத்தைச் சொல்லி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
தீபாவளி அன்று மகாலட்சுமியை வழிபடும் போது:
‘ஓம் மகாலட்சுமி சவித்மஹே
ஸ்ரீவிஷ்ணு பத்னிச தீமஹி
தன்னோ: லக்ஷ்மி பிரசோதயாத்’
என்று 21 தடவைகள் போற்றி வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
புத்தாடை அணியும் போது..
தீப தேவி மகா சக்தி சுபம் பவது மேசதா
ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய
ஓம் நமசிவாய ’
என்று மூன்று முறை சொன்ன பிறகு, புத்தாடைகள் அணிந்தால் மேன்மேலும் ஆடைகள் சேரும்.