கிருஷ்ணனுக்கு நன்றி
ADDED :3090 days ago
நரகாசுரன் என்ற கொடியவனை கிருஷ்ணர் வதம் செய்தார். அப்பொழுது அவன் தன் இறந்த நாளை பூவுலக மக்கள் விழாவாகக் கொண்டாட கிருஷ்ணரிடம் வரம் பெற்றான். அதுவே தீபாவளி என்றுதான் நாமெல்லாம் காலம் காலமாகச் சொல்லி வருகிறோம். அதுமட்டுமல்ல, தீபாவளி அன்னதானம் செய்வதற்கும் மிகச் சிறந்த நாள். அதுவும் காசியில் அன்னதானம் செய்வது மிகமிகச் சிறப்பு!