காசியில் அன்னபூரணி
ADDED :3090 days ago
அன்னை ஆதிபராசக்திக்கு ஆயிரம் திருநாமங்கள். அதில் ஒன்று தர்ம சம்வர்தினி. அதாவது அறம் வளர்த்த நாயகி என்பது! ஆம், காஞ்சியில் விளங்கும் காமாட்சி, ஈசனிடம் இரு நாழி (இரண்டு படி) நெல் பெற்று முப்பத்திரண்டு அறங்கள் புரிவதாக புராணங்கள் கூறும். காசியில் விஸ்வநாதருடன், விசாலாட்சியாக மட்டும் அவளில்லை. அதே விஸ்வநாதரின் அருகிலேயே அன்னபூரணியாக அட்சயப்பாத்திரத்துடன் அமர்ந்திருக்கிறாள். அதுவும் தீபாவளி சமயம் மூன்று நாட்கள் தங்க அன்னபூரணியாக ஜொலிக்கிறாள்!