உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுந்துமலை கோயிலில் இன்று கார்த்திகை தீப விழா

கொழுந்துமலை கோயிலில் இன்று கார்த்திகை தீப விழா

சேரன்மகாதேவி:சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று (8ம் தேதி) கார்த்திகை தீப விழா நடக்கிறது.சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தீப விழா நடப்பது வழக்கம். கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு இன்று (8ம்தேதி) அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 9மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.மாலை 6 மணிக்கு கொழுந்துமாமலை உச்சியில் அண்ணாமலை, உண்ணாமலை என்ற இரு தீபங்கள் ஏற்றப்பட்டு பாலசுப்பிரமணியருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக சேரன்மகாதேவி பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத் பர சமய கோலாரிநாத ஆதீனம் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !