ஓய்வெடுக்கும் குமரன்!
ADDED :3107 days ago
ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு குமரக்கடவுள் திருக்கோயில். சூரபத்மனை வதம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் முருகப்பெருமான் ஓய்வெடுப்பதற்காக தங்கிய வனப்பகுதி இது. இங்கே, கைக்குத்தல் அரிசியையும் பாசிப்பருப்பையும் ஊறவைத்து, அவற்றுடன் சர்க்கரையைக் கலந்து நைவேத்தியம் செய்கிறார்கள். இங்கு எதையும் வேகவைப்பது இல்லையாம். முருகப்பெருமான் ஓய்வெடுப்பதால் பகலில் பூஜைகள் நடைபெறாது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.