திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா பாதுகாப்பு பணி குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி., ஸ்ரீதரன் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா வரும் நவ., 23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச.,2, அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக பந்தக்கால் முகூர்த்தம் கடந்த, 1ல் நடந்தது. இந்நிலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில், பாதுகாப்பு பணி ஏற்பாடு குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி.,ஸ்ரீதரன் ஆய்வு செய்தார். உடன் எஸ்.பி.,பொன்னி, கோவில் இணை ஆணையர் ஜெகநாதன் இருந்தனர்.