உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலையில் கந்த சஷ்டி விழா:விரதம் துவக்கிய பக்தர்கள்

சிவன்மலையில் கந்த சஷ்டி விழா:விரதம் துவக்கிய பக்தர்கள்

காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா நேற்று துவங் கியது; பக்தர்கள் காப்பு கட்டி, விரதத்தை துவக்கியுள்ளனர்.காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, நேற்று துவங்கியது; வரும், 27ம் தேதி வரை, ஒரு வாரத்துக்கு, இவ்விழா நடைபெறுகிறது. சஷ்டி விழாவின் துவக்கத்தை முன்னிட்டு, சுப்ரமணியர், வள்ளி தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக, காப்பு கட்டி, சஷ்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து, எம்பெருமான், கோவிலை வலம் வந்து, மலையில் இருந்து, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சாமி கோவிலுக்கு சென்றார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

சஷ்டி விழாவில், இன்று முதல், தினமும் காலை, 10:30 மணி; மாலை, 4:00 மணிக்கு, அபிஷேக ஆராதனை, திருவீதி உலா நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழா வின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா, அக்., 25ம் தேதி, மாலை 5:00க்கு நடைபெறவுள்ளது. அடுத்த நாள், (அக்., 26ல்) காலையில், அபிஷேக ஆராதனை; மாலை, 6:00 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அக்., 27ல், சுவாமி மலையில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, உதவி ஆணையர் கண்ணதாசன், சிவன்மலை கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி சன்னதியில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.தினமும் சிறப்பு அபி ஷேக பூஜைகள் நடக்கின்றன; வரும், 25ல், முக்கிய நிகழ்ச்சியான, முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி, தேர்வீதிகளில் நடக்கிறது. அதேபோல், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், அலகு மலை முத் துக்குமாரசாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது; ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து, சஷ்டி விரதம் துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !