தேனி கோயிலில் கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜை
ADDED :2907 days ago
தேனி: தேனி என்.ஆர்.டி.,நகரில் உள்ள கணேச கந்த பெருமாள் கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சஷ்டி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பங்கேற்று தரிசனம் பெற்றனர். போடி: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, நேற்று முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் துவக்கினர். ஏராளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில்,பொங்கல், பிரசாதம் வழங்கப்பட்டது.