வல்லபை ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :2907 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காவும், மழைபெய்ய வேண்டியும் 1008 விளக்கு பூஜை நேற்று நடந்தது. மூலவர் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, நவக்கிரகங்கள், சங்கரன் சங்கரி உள்ளிட்டதெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் சரண கோஷம், பஜனை உள்ளிட்ட பக்திபாடல்களை பாடினர். மாலையில் நடந்த விளக்குபூஜையில் குங்கும அர்ச்சனை, மங்கல்ய பூஜை, வருண சங்கல்ப ஜெப வேள்வி உள்ளிட்டவைகள் நடந்தன. கோயில் குருசாமி மோகன் சுவாமி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.