சனிபகவான் சன்னதியில் தரும் பிரசாதத்துடன் வீட்டிற்கு செல்லலாமா?
ADDED :2905 days ago
சனிபகவான் என்று சொல்லி விட்டு இப்படி கேட்கலாமா? பகவான் என்பது பாக்கியம் தரும் தெய்வம். தவறான பிரசாரத்தால், சனி என்றாலே பயப்படுகின்றனர். அள்ளிக் கொடுப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. முன்வினை பாவம் தீரவே கஷ்டம் தருகிறார். அவருக்குரிய எள் சாதம் உட்பட பிரசாதங்களை எடுத்துச் செல்லலாம்.