சதாபிஷேகம் கண்டவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என சொல்வது ஏன்?
ADDED :2993 days ago
80 வயது 8 மாதம் முடிந்த நிலையில், ஆயிரம் சந்திர தரிசனம் கண்டவர்களுக்கு சதாபிஷேகம் நடத்துவர். இவர்கள் தங்களின் 80 வயதில், மாதம் ஒன்று வீதம் 960 தரிசனமும், இந்த 80 ஆண்டுகளுக்குள் 22 ஆண்டுக்கு ஒன்று வீதம் 32 தரிசனங் களையும் அதிகம் காண்பர். மேலும் 8 மாதங்களில் 8 தரிசனம் கண்டதும், ஆயிரம் தரிசனம் பூர்த்தியாகிறது. ஆயிரம் முறை சந்திர தரிசனம் முடித்து சதாபிஷேகம் செய்தவர்களை ஆயிரம் பிறை கண்ட அண்ணல் என்பது மரபு.