முருகன் சிலை ரகசியம்
ADDED :3002 days ago
இலங்கை தலைநகரான கொழும்பிலிருந்து 230 கி.மீ., தூரத்தில் கதிர்காமம் முருகன் கோயில் உள்ளது. இவர் கதிரேசன் எனப்படுகிறார். கருவறையில் எந்த வடிவில் முருகன் இருக்கிறார் என்பது ரகசியம். சன்னதி கதவில் தொங்கவிடப்பட்டுள்ள திரையில் மயில் மீது வள்ளி, தேவசேனாவுடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் இருக்கும். இதைப்போன்று வேறு திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த திரைக்கே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் முடியும் விழா பிரபலமானது. விழாவின் போது யானை மீது, முருகனுக்குரிய யந்திரம் அடங்கிய ஒரு பெட்டி எடுத்து வரப்படும். இதை முருகனாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர். இக்கோயிலின் பின்புறமிருக்கும் அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர்.