உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

திருமலைக்கேணியில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

திருமலைக்ககேணி, திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது. கடந்த அக்., 20 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். மறுநாள் சிவபூஜை திருக்காட்சி நடந்தது. மூன்றாம் நாள் சிவ உபதேச திருக்காட்சி நடந்தது. அக்.,23 அன்று அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், அக.,24 ல் வேல் வாங்கும் காட்சி நடந்தது. நேற்று சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. காலையில் கந்தசஷ்டி அபிேஷகம், கலச நீராட்டு, லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை கிரிவலப் பாதையில் சுவாமி வலம் வந்து வதம் செய்யும் காட்சிகள் நடத்தப்பட்டது. நேருஜி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் காட்சிகளை நடித்து காண்பித்தனர். தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. இன்று திருக்கல்யாண உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !