உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்

பழநி மலைக்கோயிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்

பழநி: கந்த சஷ்டி விழாவின் நிறைவாக பழநி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரினம் செய்தனர்.

மலைக்கோயிலில் கந்த சஷ்டிவிழா அக்.,20ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயிலில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இன்று(அக்.,26ல்) திருக்கல்யாணத்தை முன்னிட்டு விநாயகர் பூஜையுடன், ஆறு கலசங்கள் வைத்து சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன.  காலை மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், தீபாராதனை, வேத பாராயணம் நடந்தது. திருமண கோலத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரினம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !