சின்னாளபட்டி சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம்
சின்னாளபட்டி, சின்னாளபட்டி கோயில் சஷ்டி விழாவில், சூரசம்ஹாரம் நடந்தது. சின்னாளபட்டியில், நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. இங்கு, இந்தாண்டு திருவிழா, அக். 19ல் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று மாலை நடந்தது. முன்னதாக, யாகசாலை பூஜையுடன் துவங்கி, கலசாபிேஷகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதல் நடந்தது. பின்னர்,சூரபத்மனை வசதம்செய்யும் நிகழ்ச்சிநடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று(அக். 26) காலை 10.30 மணிக்கு, சிவசுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு, வேலப்பருக்கு பலவகையான அபிேஷகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சுவாமியை வணங்கிச் சென்றனர். தாண்டிக்குடி தாண்டிக்குடி பால முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா மற்றும் சஷ்டி விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு 21 வகையான அபிேஷகம் செய்யப்பட்டது. பின், ஆராதனையும், விளக்குப் பூஜைகள் நடந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர், முன்னதாக அன்னதானம் நடந்தது.