உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் அர்ச்சனை, சேவை கட்டணம் உயர்வு

ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் அர்ச்சனை, சேவை கட்டணம் உயர்வு

ஈரோடு: கோட்டை, ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவில்களில், அர்ச்சனை உள்ளிட்ட சேவை கட்டணங்கள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. ஈரோட்டில், பிரசித்தி பெற்ற கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில், மகிமாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோவில்கள் உள்ளன. அர்ச்சனை முதல் திருமணம் வரை, மிக குறைவான கட்டணங்களே கோவிலில் நடைமுறையில் இருந்தது. கோவில் நிர்வாக செலவு, மின்சார செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை சமாளிக்க, அறநிலையத்துறை ஆணையம், புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல், அர்ச்சனை செய்ய, ஐந்து ரூபாய், பால் அபி?ஷகம், 10 ரூபாய், சிறப்பு அபி?ஷகம், 50 ரூபாய், நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை, பெண் அழைப்புக்கு, 500 ரூபாய், திருமண விண்ணப்பம், 100 ரூபாய், திருமணம் நடத்த, 1,000 ரூபாய், சிறப்பு தரிசனம், 30 ரூபாய் என, புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அன்னதானத் திட்டத்தில், ஒரு நாள் கட்டணம், 2,500 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணம் குறித்த அறிவிப்பு, கோவில் வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !