உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று ஆண்டுகளுக்கு பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் தெப்பக்குளம் நிரம்பியது

மூன்று ஆண்டுகளுக்கு பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் தெப்பக்குளம் நிரம்பியது

நாகர்கோவில், மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது. இக்கோயிலின் வடக்கு ரத வீதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 25 அடி ஆழத்தில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. நான்கு பக்கமும் படித்துறை கட்டப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட இந்த குளத்துக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் காணாமல் போனதால் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது. இதனால் தெப்பத்திருவிழாவின் போது படித்துறையில் தேவி விக்ரகத்தை வைத்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு அபிேஷகம் நடத்தப்படும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கால்வாய்களை துார்வாரி தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !