வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :3029 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவத்தில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐந்தாம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று மாலை, சூரசம்ஹார நடந்தது. இன்று (அக்.,26) காலை, 11:00 மணிக்கு முருகன் வள்ளி, தெய்வாணைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.