உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கந்த சஷ்டி விழா: கூடல்குமாரருக்கு பாவாடை சாத்துப்படி

மதுரை மீனாட்சி அம்மன் கந்த சஷ்டி விழா: கூடல்குமாரருக்கு பாவாடை சாத்துப்படி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த கந்த சஷ்டி நிறைவு விழாவில் கூடல்குமாரருக்கு பாவாடை சாத்துப்படி செய்து தீபாராதனை நடந்தது.  சஷ்டி விரதத்தை முடித்து பங்கேற்ற பக்தர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.,20ம் துவங்கி நடைபெற்று வந்தது. கந்த சஷ்டி நிறைவு விழாவில் நேற்று(அக்.,26ம்) கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம்(பாவாடை) சாத்துப்படியும், விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெற்றது. சஷ்டி விரதத்தை முடித்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !