திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்
ADDED :3046 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நேற்று நடந்தது. கோயிலில் காலை 8:00 மணிக்கு சுவாமி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் சட்டத் தேரில் எழுந்தருளினார். அக்.,20முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன் தேர் நிலை நிறுத்தப்பட்டது. கோயில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்தனர். மாலை 4:00 மணிக்கு மூலவர் முன், 108 படி தயிர் சாதம் படைக்கப்பட்டு, அதன்மேல் காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை நைவேதன தரிசனம் நடந்தது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார்.