உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிக்கல் கோவில் சூரசம்ஹாரம்

பரிக்கல் கோவில் சூரசம்ஹாரம்

உளுந்துார்பேட்டை : பரிக்கல், பு.கொணலவாடி கிராம ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கம்பம் ஏறி பாரதம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா பரிக்கல் சுப்ரமணியர் சுவாமி கோவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பின்னர் தினசரி சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக வேல், தழுவ குழந்தை ஈஸ்வரர் கோவில் சென்று தீபாரதனை வழிபாட்டுடன் புறப்பட்டு மீண்டும் கோவில் அருகே வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு தீபாரதனை வழிப்பாட்டுடன் கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் கம்பம் ஏறி பாரதம் படித்தனர். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், பு.கொணலவாடி கிராம ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !