திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு சாந்தாபிஷேகம்
ADDED :2935 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. சஷ்டி தேரோட்டம் முடிந்து உற்சவர் சுவாமி, தெய்வானை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணிக்கு சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜைகள் நடந்தன. பல்வகை திரவிய அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு தங்ககுடம், தெய்வானைக்கு வெள்ளி குடங்களில் இருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன காப்பு சாத்தப்படியாகி, புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
திருக்கல்யாணம்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியை தொடர்ந்து வள்ளி, தெய்வானை, கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. 200 சீர்வரிசை தட்டுக்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.