பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3232 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பொள்ளாச்சி கடை வீதி சுப்பிரமணிய சுவாமி கோவில், கந்த சஷ்டி விழா, கடந்த, 20ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தொடர்ந்து, நான்கு கால அபிேஷக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த, 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், 25ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் காலை, 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்வச பூர்த்தி நிகழ்ச்சி நடந்தது.